Thirumavalavan Sister

கரோனா வைரஸால் உயிரிழந்த திருமாவளவன் அக்காவிற்கு இரங்கல் தெரிவிப்பதற்கு பதிலாக வாழ்த்து கூறியுள்ளார் பிக்பாஸ் நடிகை.

Kajal Pasupathi Controversy Tweet : இந்தியாவின் கொரானா வைரஸ் பரவல் தற்போது அதிதீவிரமடந்துள்ளது. தமிழகத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி வருகிறது. இவர்களில் இரண்டரை லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தாலும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விசிக கட்சி தலைவரான தொல் திருமாவளவன் அவர்களின் அக்காவும் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரபல நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி இரங்கல் தெரிவிப்பதற்கு பதிலாக கெட் வெல் சூன் என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பலரும் லூசா நீங்க என திட்டி வருகின்றனர். அவருக்கு தமிழ் படிக்கச் தெரியாது என்பதால் இவ்வாறு பதிவிட்டு இருக்கலாம் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/tamizh_Agri/status/1290927012295536640?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.