Kajal and Jayam Ravi
Kajal and Jayam Ravi

Kajal and Jayam Ravi – அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை நடிகை காஜல் அகர்வால் முழுவதுமாக முடித்துவிட்டாராம்.

இதை படக்குழு புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர். அவரை நல்லபடி வழியனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஜெயம்ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.