காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் நடத்தப்பட்ட ஃபோட்டோ ஷூட்டின் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் உள்ள திரைப்படங்களில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். அதையடுத்து காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பை தொழிலதிபரான கௌதம் கிட்சலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதற்குப் பின் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த காஜல் அகர்வால் கர்ப்பமான பிறகு அப்படங்களில் இருந்து விலகி விட்டார். அதற்குப் பின் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த காஜல் அகர்வால் அக்குழந்தைக்கு நீல்ஸ் கிட்சலு என்ற பெயரை வைத்துள்ளார். தனது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வரும் காஜல் அகர்வால் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்திலும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதேபோல் தற்போது தனது குழந்தையுடன் இணைந்து முதல் முறையாக போட்டோ ஷூட் செய்திருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் . அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூப்பர், க்யூட் என்ற வார்த்தைகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

https://youtube.com/shorts/rBW_KPa6BMc?feature=share