மதுரையில் நடைபெற்ற விருமன் திரையிடலின் போது நடிகர் கார்த்தியுடன் கலந்து கொண்ட அதிதி சங்கர் ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் கடி ஜோக் மற்றும் பாட்டு பாடி சிரிக்க வைத்திருக்கிறார்.

கொம்பன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து அசத்தியிருக்கும் திரைப்படம் தான் இப்படத்தின் மூலம் பிரம்மாண்ட இயக்குனராக திகழும் இயக்குனர் சங்கர் அவரது மகளான அதிதி சங்கர் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற விருமன் திரையிடலின்போது நடிகர் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் கலந்துகொண்டனர். அப்போது ரசிகர்கள் நடிகை அதிதி சங்கரிடம் அவர படத்தில் பாடிய மதுரை வீரன் பாடலை பாடுமாறு முதலில் கேட்டனர்.

அதற்குப் பிறகு அவரிடம் ஒரு கடி ஜோக் சொல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு நடிகை அதிதி சங்கர் முதலில் பாடல் பாடி அசத்திய பிறகு “சண்டே அண்ணைக்கு சண்டை போடலாம். ஆனால் மண்டே அன்னைக்கு மண்டையப் போட முடியுமா” என்ற காமெடியான கடி ஜோக்கையும் கூறி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். இந்த கடி ஜோக் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது