பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து பிரபல நடிகை விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தினமும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விட்டு விலகும் முக்கிய நடிகை.. வெளியான அதிர்ச்சி புகைப்படம்

காரணம் அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவது தான். குடும்ப பங்கான இந்த சீரியலை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இதில் கதிரின் மனைவியாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா சீரியலில் இருந்து விலகப் போவதாக சொல்லப்படுகிறது.

ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் அவர் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது. இப்படி அந்த நிலையில் காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மிஸ் யூ ஆல் என பதிவு செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விட்டு விலகும் முக்கிய நடிகை.. வெளியான அதிர்ச்சி புகைப்படம்

இதனால் அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவது உறுதியாகி விட்டதா? என ரசிகர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்