காவலா பாடலுக்கு ரீல்ஸ் செய்திருக்கும் தமன்னாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.

அதிரடியான சண்டை படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி மிரட்டியுள்ளார். இந்நிலையில் அனிருத் இசையமைப்பில் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ என்னும் கவர்ச்சி நடன பாடல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றைய முன் தினம் வெளியானது.

ரஜினி மற்றும் தமன்னா இணைந்து நடனம் ஆடியுள்ள இப்பாடல் வெளியான அரை மணி நேரத்திலேயே இணையதளத்தை அதிரவிட்டிருந்தது. தற்போது ரசிகர்களால் அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்டு வரும் இப்பாடலின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் இந்தப் பாடலுக்கு நடிகை தமன்னா ரீல்ஸ் செய்துள்ளார். அதன் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.