இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வரும் கவாலா பாடல்.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.

அதிரடியான சண்டை படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி மிரட்டியுள்ளார். இந்நிலையில் அனிருத் இசையமைப்பில் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ என்னும் பாடல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று மாலை வெளியானது.

ரஜினி மற்றும் தமன்னா இணைந்து நடனம் ஆடியுள்ள இப்பாடல் வெளியான அரை மணி நேரத்திலேயே இணையதளத்தை அதிரவிட்டிருந்தது. தற்போது ரசிகர்களால் அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்டு வரும் இப்பாடல் யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங் No.1 இடத்தைப் பிடித்து பார்வையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருவதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்த தகவலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.