
Kaatrin Mozhi Team : காற்றின் மொழி’ திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
இந்த சமயத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ‘டெல்டா’ பகுதி மக்களுக்கு நீங்கள் ‘காற்றின் மொழி’ திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம்.
இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு ‘காற்றின் மொழி’ டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் ‘கஜா’ புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்.