
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லி போன்ற வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காஜல் பசுபதி. மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இவர் ஓரிரு வாரத்திலேயே வெளியேறினார். டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த காஜல் பசுபதி அவரைப் பிரிந்த பிறகு தற்போது அவருடைய குடும்பத்துடன் நட்பாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு படத்தில் நடித்ததற்காக பேமெண்ட் கேட்டபோது இப்போதைக்கு பணம் இல்லை வெயிட் பண்ணுங்க என சொன்னார்கள். அப்படி இருக்கும்போது இயக்குனர் நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் குடித்துவிட்டு ரகளை செய்ததாக கூறியிருக்கிறார். வேலை செய்யும் போது நான் குடித்ததாக சரித்திரமே கிடையாது.
படுத்தால் தான் பேமென்ட் கொடுக்க முடியும் என்று சொல்றாங்கன்னு சொல்லுவதற்கு எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஆனா அப்படி சொன்னா உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? என அந்த இயக்குனரை எச்ச, சாக்கடை போன்ற தகாத வார்த்தைகளில் விமர்சனம் செய்து பதிவு செய்துள்ளார்.
இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் யார் அந்த இயக்குனர் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.