கே ராஜன் அவர்கள் தல அஜித்தை எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு பேசி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இது ரசிகர்களை சூடேற்றி வருகிறது.

கோலிவுட் திரை வட்டாரத்தில் ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் அஜித்குமார் இயக்குனர் வினோத் இயக்கிக் கொண்டிருக்கும் ஏகே 61 திரைப்படத்தில் மும்பரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க தயாராக இருக்கும் அஜித் குமார் பற்றின தகவல் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

ஆனால் தற்போது அஜித் குறித்து வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை சூடேற்றியுள்ளது. அதாவது தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் சமீப காலமாக நடிகர் நடிகைகளை பற்றி கடுமையாக பேசி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது நடிகர் அஜித்குமாரை பற்றி கடுமையாக பேசியிருக்கிறார். அதாவது தல அஜித் குமார் தனது ரசிகர்களிடம் தனக்காக எதுவும் செய்ய வேண்டாம் என்றும் தன்னுடைய படத்தை மட்டும் வந்து பார்த்தால் போதும் என கூறியிருந்தார்.

ஏனென்றால் தனக்காக நேரத்தை செலவிட்டு அவர்களது வேலையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் அவர் அப்படி கூறியிருந்தார். இருந்தாலும் அவரை ரசிகர்கள் எங்கு சென்றாலும் அவரைப் பார்த்து ஆர்ப்பரித்து வருகின்றனர். இது குறித்து தயாரிப்பாளர் கே. ராஜன் அவர்கள் இவ்வாறு அஜித் மீது வெறியாக இருக்கும் ரசிகர்களுக்கு அவர் ஒன்றுமே செய்ததில்லை என விலாசி உள்ளார்.

மேலும் அஜித், தான் வாங்கும் கோடிகளில் சில லட்சங்களை செலவு செய்து ரசிகர்களுக்கு ஒரு வாய் சோறு போடலாம். ஆனால் அதை செய்ய மாட்டார். எம்ஜிஆர் தன் தொண்டர்களுக்காக விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதனால் தான் அவர் இறந்தும் வாழ்கிறார். ஆனால் இவர்கள் இருந்தும் வாழாமல் உள்ளனர் என அஜித்தை கே ராஜன் ஒரு பேட்டியில் விமர்சித்திருந்தார். ரசிகர்களின் நலன் கருதி ஒதுங்கி இருக்கும் அஜித்தை பற்றி இப்படி கடுமையாக பேசி இருக்கும் கே ராஜன் அவர்களின் பேட்டி அஜித் ரசிகர்களை மிகவும் சூடேற்றி உள்ளது.