பிகில் படத்தால் பல கோடி நஷ்டம் என பிரபல தயாரிப்பாளர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

K Raja About Bigil Movie : தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தவர் கே ராஜன். இவர் தொடர்ந்து பல மேடைகளில் தமிழ் சினிமா குறித்து பேசி வருகிறார். பெரிய நடிகர்கள் வாங்கும் சம்பளம் பற்றிய விமர்சனம் செய்து வருகிறார்.

தயாரிப்பாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் டாப் நடிகர்கள்.. பிகில் படத்தால் எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா? - பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி

அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையில் இந்த படத்தால் 30 கோடி நஷ்டம் என கே ராஜன் கூறியுள்ளார்.

மேலும் பெரிய நடிகர்கள் வாங்கும் 100 கோடி சம்பளத்தை எங்கே பதுக்கி வைக்கிறார்கள்? தயாரிப்பாளர்களின் ரத்தத்தை உறிஞ்சு குடிக்கிறார்கள், பெரிய நடிகர்கள் அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார். இந்த தகவலை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

தயாரிப்பாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் டாப் நடிகர்கள்.. பிகில் படத்தால் எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா? - பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி

இதுவரை அஜித்தை விமர்சனம் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது விஜய் என்னை சீண்டி இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.