44 வயதில் முரட்டு தனமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜோதிகா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. 90-களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். 2 குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகு தற்போது மீண்டும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மேலும் தற்போது உடலை பிட்டாக வைத்து கொள்ள ஜிம் ஒர்க் அவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது முரட்டு தனமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட 44 வயதில் இப்படியா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் லைக் செய்து வருகின்றனர்.