Jyothika & Ajith

Jyothika & Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் மீண்டும் தனக்கு பிடித்த நடிகர் தல அஜித் தான் என நிரூபித்துள்ளார்.

1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே பிரபல ஹீரோவான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமானதும் நடிப்பிற்கு முழுக்கு போட்ட சூர்யா தற்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கி வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.

கடந்த வெள்ளிக் கிழமை ஜோதிகாவின் நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் காற்றின் மொழி என்ற படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக விதார்த் நடித்து இருந்தார். ஜோதிகாவின் அறிமுக காட்சியில் தல அஜித்தின் வசனத்தை பேசுகிறார் விதார்த்.

இதன் மூலம் ஜோதிகா தனக்கு பிடித்த நடிகர் அஜித் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் தல ரசிகர்கள் இந்த காட்சியை சமூக வளையதள பக்கங்களில் அதிகமாக ஷேர் செய்தும் வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.