71 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ஜோதிகா.

சினிமாவில் பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் ஜோதிகா. நடிகை சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு பல ஆண்டுகள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் பிறகு சோலோ நாயகியாக படங்களில் நடிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் நடிகை ஜோதிகா மலையாளத்தில் நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. 71 வயதாகும் மம்முட்டிக்கு ஜோதிகா ஜோடியாக நடிக்க போவதாக பரவிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி இருந்தது.

இந்த நிலையில் ஜோதிகாவின் பிறந்தநாள் தினத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் ஜோ பேபி இயக்கும் காதல் தி கோர் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நாயகியாக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.