ஒரு ஏஜென்சி நிறுவனத்தை நம்பி ஏமாந்த விஷயத்தை கண்ணீருடன் கூறியுள்ளார் ஜூலி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஜூலி. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக இவர் ஹாஸ்பிடல் ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்தார்.

நம்பி ஏமாந்த ஜூலி.. மூன்று லட்சமும் அபேஸ் - கண்ணீருடன் ஜூலி வெளியிட்ட தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். சில படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆன நிலையில் இன்னும் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் சில உள்ளன. இப்படியான நிலையில் தற்போது ஜூலி தனது வாழ்க்கையில் ஒரு ஏஜென்சி நிறுவனத்தை நம்பி ஏமாந்த விஷயத்தை கூறியுள்ளார்.

நம்பி ஏமாந்த ஜூலி.. மூன்று லட்சமும் அபேஸ் - கண்ணீருடன் ஜூலி வெளியிட்ட தகவல்

அதாவது ஒரு மும்பை ஏஜென்சி மூலம் நர்சாக லண்டன் சென்று வேலை செய்ய பணம் கட்டியதாகவும் ஆனால் அந்த நிறுவனம் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் உடைந்து போன தனக்கு தன்னுடைய குடும்பத்தார் தான் ஆறுதலாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.