Jop Opening EPS
Jop Opening EPS

Jop Opening EPS -நெல்லை: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டப்பேரவை தொகுதிகளுக்கு காலியாக உள்ள தொகுதகளில் இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று நெல்லையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்தார்.

நெல்லையில் நேற்று எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் பேசியதாவது, கொடநாடு பிரச்னையில் ஒரு கூலிப்படை செய்ததை என்னோடு சேர்த்து, எனக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று கூறினார்.

பாளையங்கோட்டையில் மற்ற கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலத்திட்டங்கள் சரியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக திகழ்கிறது.

மேலும் ‘இந்த ஆட்சி 10 நாளில் கவிழ்ந்து விடும், 6 மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று சிலர் ஆருடம் கூறுகின்றனர்! ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறாது’ என்று கூறினார்.

மேலும் கோவில்பட்டி அருகே, அமைச்சர் கடம்பூர்ராஜூ தலைமையில் நடந்த விழாவில் நாடாளுமன்ற தேர்தலுடன், இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

“இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க, வருகிற 23, 24ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த உள்ளோம்.

மூன்று லட்சம் கோடி அன்னிய முதலீட்டை ஈர்த்து, தமிழகத்தை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.