ஜான்ட்டி ரோட்ஸ்

ஜான்ட்டி ரோட்ஸ் தென் ஆப்பிரிக்க ஒளி வேக பீல்டர், இவர் சமீபத்தில் ஒரு இதழுக்கு பேட்டி அளிக்கையில் அதில் ஒரு கேள்விக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். அந்த பதில் இந்தியர்களை பெருமைப்பட செய்துள்ளது.

அந்த கேள்வி என்ன என்றால் ஏன் உங்களுக்கு இந்தியாவை அவ்வளவு பிடித்திருக்கின்றது? என்பது தான்.

ஜான்ட்டி ரோட்ஸ் கூறியது :

எனக்கு மட்டும் அல்ல என் குடும்பத்தினருக்கும் இந்தியாவை மிகவும் பிடிக்கும். நான் நிறவெறி கொண்ட ஆப்பிரிக்காவில் வாழ்ந்தவன், நான் அங்கு நிறைய வேறுபாடுகளை பார்த்து இருக்கிறேன். கறுப்பர்களுக்கும் சமூகத்திற்கும் இருக்கும் வேறுபாடு என்ன என்பதை பற்றி நன்கு தெரிந்தவன்.

ஆனால் இந்தியாவின் பன்முக தன்மை மிகவும் ஈர்க்கின்றது. மேலும் இதன் பண்பாடு மிகவும் பிடித்திருக்கின்றது, இதன் கடினமான கலாச்சாரத்தை பின்பற்றுகிறேன்.அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன்.

எனது குழந்தை மற்றும் மனைவி என்று என் மொத்த குடும்பத்துக்கே இந்தியாவில் வாழ பிடித்திருக்கின்றது.

பன்முக தன்மை,பண்பாடு மற்றும் மனிதர்கள் என இந்தியா மிகவும் தனித்துவம் பெற்று என்னை ஈர்க்கின்றது என நெகிழ்ந்து கூறுகிறார்