Johnny Trailer Response

Johnny Trailer Response : தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயான பிரசாந்தின் நடிப்பில் வெளியாக உள்ள ஜானி படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் தற்போது தனது தந்தையும் தயாரிப்பாளருமான தியாகராஜன் கதை, திரைக்கதை, தயாரிப்பில் ஜானி படத்தில் நடித்துள்ளார்.

விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமூக வளையதளங்களில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை யூ டியூபில் 1 மில்லியன் மேலான பார்வைகளை கடந்துள்ளது. அதே போல் முகநூல் பக்கத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து உள்ளது.

தற்போது ஜானி ட்ரைலர் வெற்றி குறித்து பிரசாந்த் கூறியிருப்பதாவது எந்தவித ப்ரோமோஷனும் இல்லாமல் ஜானி படத்தின் ட்ரைலர் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் என்றும் எள்ளளவும் ஆதரவு குறையாத என்னுடைய ரசிகர்கள் தான். அவர்கள் இல்லை என்றால் இந்த ட்ரைலர் வெற்றி சாத்தியமில்லை என கூறியுள்ளார்.

ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் மத்தியில் ஜானி பட ட்ரைலர் பாராட்டை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.