நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ஜிமிக்கி பொண்ணு பாடலை வேற பாடலுடன் எடிட் செய்யப்பட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இளைய தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் கடந்த 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியானது. வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 250 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்மஸ் ஹிட் அடித்து வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜிமிக்கி பொண்ணு பாடல் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்திருந்தது. தற்போது இப்பாடலின் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஜிமிக்கி பொண்ணு பாடலின் வீடியோவை நடிகர் கமல்ஹாசன் இந்தியன் திரைப்படத்தில் மனிஷா கொய்ராலாவுடன் ஆடி அசத்தியிருந்த டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா என்ற பாடலுடன் எடிட் செய்யப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.