லால் சலாம் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க உள்ளார் பிரபல நடிகை.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கையாக பிரபல நடிகை என்ட்ரி கொடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆமாம் தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மனைவியும் நடிகையுமான ஜீவிதா தான் இந்த படத்தில் நடிக்க உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுக்க உள்ள ஜீவிதா இந்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.