Jeje Lalpekhlua
Jeje Lalpekhlua

Jeje Lalpekhlua – ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2019-ல் இந்தியா சிறப்பாக விளையாடும் என இளம் பார்வர்ட் வீரரான ஜிஜே லால்பெகுலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரி மாதம் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இப்போட்டிகள் நடைபெற இருக்கின்றது.

இதில் இந்தியாவும், 8 ஆண்டுகளுக்கு பின் பங்கேற்கிறது. கேப்டன் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அபுதாபியில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஜிஜே நேற்று கூறியது : அணியில் நான் சேரும் போதே சுனில் சேத்ரியுடன் இணைந்து ஆடி வருகின்றேன்.

மைதானத்திலும், வெளியிலும் எனக்கு பல உதவிகளை செய்துள்ளார் சேத்ரி.

தாய்லாந்துடன் நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம்.

தற்போதைய இந்திய அணி வலிமையுடன் உள்ளது. வெற்றி பெற தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்.

எங்களுக்கு ஆசிய கோப்பை உலக கோப்பை போன்றது, பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் தலைமையில் அணி கட்டுக்கோப்பாக ஆடி வருகிறது.” என்று தெரிவித்தார்.