Jayam Ravi

Jayam Ravi : ஜெயம் ரவி இயக்குனராக அறிமுகமாக உள்ளாராம். அதுவும் அவருடைய படத்தின் முதல் ஹீரோ யார் என்பதையும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில்அடங்கமறு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் இன்று முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. படத்தின் ப்ரோமோஷனுக்காக ஜெயம் ரவி நிறைய பேட்டிகளை கொடுத்து வந்தார்.

மேலும் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி இருந்தார். அப்போது இவரிடம் இயக்குனராக அறிமுகனால் யாரை ஹீரோவாக தேர்ந்தெடுப்பீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஜெயம் ரவி யோகி பாபு என குறிப்பிட்டுள்ளார். ஆனால் யோகி பாபுவோ காமெடியனாக தான் நடிப்பேன். எனக்கு ஹீரோலாம் செட்டாகாது என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.