நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் ராஜராஜ சோழன் குறித்தும் பொன்னியன் செல்வன் படம் குறித்தும் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் தான் ஜெயம் ரவி. இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி மாபெரும் சாதனையை படைத்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ராஜராஜ சோழனின் சதய விழாவின் போது பொன்னியன் செல்வனாக நடித்தது பற்றி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ராஜ ராஜசோழனுக்கு சதய விழா. இவரது புகழையும், பெருமையும் போற்றி, அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து பெருமை கொள்வோம். பொன்னியின் செல்வனாக “ திரையில் உம்மை பிரதிபலிக்க” நான் என்ன தவம் செய்தேனோ. என்று பதிவிட்டு இருக்கிறார்.