நரைத்த தாடியுடன் அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரை இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2ம் பாகம், அறைவன், அகிலன், Siren ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

இப்படியான நிலையில் நடிகர் ஜெயம் ரவி நரைத்த தாடியுடன் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.