Jayalalitha Idly Memes Gone Viral
Jayalalitha Idly Memes Gone Viral

Jayalalitha Idly Memes Gone Viral – சென்னை: ‘இன்று தமிழகத்தில்,சமூக வலைதளங்களில் காட்டு தீயாய் பரவும் டாபிக், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா தங்கியிருந்த போது வந்த சாப்பாட்டு பில் தான்’ .

அதிலும் அவர் 75 நாட்கள் சாப்பிட்டதாக வந்த பில்- ஐ பார்த்து தமிழகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவுகளால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை ஏற்படுத்தியது.

தற்போது, இந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கட்சியினர், அரசு அதிகாரிகள், உறவினர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்கான மருத்துவ செலவு குறித்த பட்டியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதில் “மொத்த செலவு ரூ. 7 கோடி என்றும், அதில் அதிமுகவினர் ரூ. 6 கோடியை செலுத்திவிட்டதாகவும் கூறியுள்ளது”.

இவ்வாறு இருக்க “ஜெயலலிதாவின் உணவு செலவு மட்டும் ரூ. 1.17 கோடி என கணக்கு கொடுத்துள்ளது அப்பல்லோ நிர்வாகம்.

ஒரு நோயாளி அதுவும் அனுமதிக்கப்பட்ட போது அரை மயக்க நிலையில் இருந்தவர் எப்படி கோடிக்கணக்கிற்கு உணவுகளை உட்கொண்டிருக்க முடியும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது”..

இந்நிலையில், 2 இட்லியின் விலை 1.17 கோடி ரூபாய் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் நெட்டி சன்கள் இதனை கிண்டலடித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

மேலும் தமிழகம் முழுவதும் இட்லி விலை குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.!

Jayalalitha Idly Memes Gone Viral
Jayalalitha Idly Memes Gone Viral