தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக விளங்கியவர் செல்வி ஜெ.ஜெயலலிதா. இவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஏ.எல் விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

நேற்று பிரியதர்ஷினி பிரியதர்ஷினி இயக்க உள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தார். ஜெயலிதாவாக நடிக்க நான் ரெடி என த்ரிஷா ஏற்கனவே அறிவித்துள்ளார்.

மேலும் அனுஷ்கா, நயன்தாராவை ஜெயலலிதாவாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறி வரும் நிலையில் லிஸ்டிலேயே இல்லாத வரலக்ஷ்மி சரத்குமார் இந்த படத்தில் ஜெ-வாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைக்க ரசிகர்கள் பலரும் வரலட்சுமிக்கு வாழ்த்துகளை கூறியுள்ளனர்.

அதற்கு வரலட்சுமி இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. உறுதியானால் நானே சொல்கிறேன் என அவர் ட்விட்டரில் பதிவு செய்து தீயாக பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.