ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது ஜவான் திரைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பிறகு தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

இந்த மூன்று படங்களும் மெகா ஹிட் ஆன நிலையில் அதனை தொடர்ந்து பாலிவுட் சினிமா பக்கம் சென்ற அட்லி ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். நயன்தாரா விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு என பல தமிழ் பிரபலங்கள் இணைந்து நடித்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த படம் தற்போது வரை ஆயிரம் கோடி ரூபாய் தாண்டி சாதனை படைத்தது. ஆமாம் படம் இதுவரை ரூ 1004.92 கோடி ரூபாய் வசூலை பெற்றிருப்பதாக படகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.