முதல்முறையாக கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார் ஜனனி அசோக் குமார்.

தமிழ் சின்னத்திரையில் மாப்பிள்ளை என்ற சீரியல் மூலம் நடிக்க தொடங்கி அதன் பிறகு செம்பருத்தி நாம் இருவர் நமக்கு இருவர் மௌன ராகம் சீசன் 1 மற்றும் சீசன் 2 உள்ளிட்ட சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி அசோக் குமார்.

செம்பருத்தி சீரியல் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர் திடீரென அந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபோது போட்டோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். ஆனால் பெரும்பாலும் அடக்கமான போட்டோக்களை மட்டுமே வெளியிட்டு வந்த ஜனனி தற்போது முதல் முறையாக கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் இதுகுறித்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CpICx4Ry-JP/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/CpHl6fjyTEO/?igshid=YmMyMTA2M2Y=