விஜய்யின் ‘தளபதி கச்சேரி’ பாடல்; இந்திய அளவில் முதலிடம்..

Web Ads

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ அரசியல் பேசும் படமாக உருவாகி வருவது தெரிந்ததே.

இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Web Ad 2

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே இப்பாடல் எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. பலரும் #ThalapathyKacheri என்ற ஹாஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

இப்பாடல் யூடியூபில் 47 லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது. இப்பாடலை அறிவு எழுதியுள்ளார். விஜய், அனிருத், அறிவு மூவரும் இப்பாடலை பாடியுள்ளனர். தற்போது இப்பாடலை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

jana nayagan movie thalapathy kacheri lyric
jana nayagan movie thalapathy kacheri lyric