சூப்பரான தகவலுடன் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்திருக்கும் பிரபல நடிகையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசை அமைப்பில் உருவாகி வரும் படத்தில் பல மொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் சென்னையை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொச்சினில் நடைபெற இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் தற்போது கொச்சின் சென்றுள்ளார். இந்த நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா பாலமுரளி விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து “ஃபேன் கேர்ள் மொமென்ட்” என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.