ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினியின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் தனது 169 வது படத்தை நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரவபூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் கடலூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் லீக்காகி உள்ளது. அது தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.