ஜெய்லர் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் “ஜெயிலர்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.

அதிரடியான சண்டை படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி மிரட்டியுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து அனிருத் இசையமைப்பில் உருவாகி இருந்த காவாலா, ஹுக்கும் மற்றும் ஜுஜூபி உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறது. மேலும் ஜூலை 28ம் தேதியான இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், ஜெய்லர் திரைப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் திரையிடப்பட இருக்கும் இப்படத்திற்கு U/A சான்றிதழை தணிகைக்குழு வழங்கி இருப்பதாக படக்குழு போஸ்டருடன் அதிகாரபூர்வமான அறிவித்துள்ளது.