ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெய்லர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலமொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் முக்கியமான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு காலையில் அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் முக்கிய அறிவிப்பாக ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் ரஜினியின் ரசிகர்களை மாபெரும் உற்சாகத்தில் ஆழ்த்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.