ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாக உள்ளது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் வேளையில் ஜெயிலர் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் என்ன அப்டேட் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.