ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான அப்டேட் வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகவுள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பலமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் பல மொழி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு மேலோட்டமாக வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்திருந்தது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தபடி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக ப்ரோமோவுக்கே குட்டி ப்ரோமோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.