
ஆறு நாள் முடிவில் ஜெயிலர் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையாடி வருகிறது. தொடர் விடுமுறையை குறி வைத்து வெளியான இந்த திரைப்படம் ஐந்தே நாளில் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இப்படியான நிலையில் ஆறு நாள் முடிவில் 380 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழு நாள் முடிவில் எப்படியும் இந்த படம் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.