ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் ஷாருக்கான் நடிக்கிறாரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் வந்தார் என்பது தெரிந்ததே. அதுபோல, ஜெயிலர்-2 பட தகவல்கள் காண்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி உள்பட பலர் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், ஷாருக்கானும் நடிக்கவிருப்பதை மிதுன் சக்கரவர்த்தி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், படக்குழு எந்தவொரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஜனவரிக்குள் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்துள்ள அனைவருமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாகி வருகிறது. ‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பிறகு ரஜினியை யார் இயக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், அப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தலைவர்-173 படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி வெளியாகும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

