ஜெயிலர் 2 படத்தில் பிரபல காமெடி.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் கூட்டணி..!

ஜெயிலர் 2 படத்தில் பிரபல காமெடி நடிகர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது கூலி என்று திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது அப்படி இவர்கள் இணைந்து நடித்த 11 வருடங்களுக்குப் பின் இவர்கள் இணைந்து நடிக்க உள்ள திரைப்படமாக ஜெயிலர் 2 இருக்கும். ஏற்கனவே முதல் பாகத்தைப் போலவே சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் இருவரும் கேமியா ரோலில் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
