
17 நாளில் வேற லெவல் வசூல் சாதனை படைத்துள்ளது ஜெயிலர் திரைப்படம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். உலகம் முழுவதும் வசூலில் பட்டையை கிளப்பி வரும் இந்த திரைப்படம் 17 நாளில் மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மொத்தமாக இதுவரை இந்த படம் 560 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
