ஜெய் பீம் படம் படைத்த புதிய சாதனை அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Jai Bhim Movie Record in Google : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஜெய் பீம். நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்தத் திரைப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் எதிர்பாராத அளவிற்கு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது. மேலும் படம் பல்வேறு சாதனைகளை பெற்று வருகிறது.

3-வது டெஸ்ட் மேட்ச் : இஷான் கிஷன்- ஹனுமா விஹாரி ஜோடி, இன்றும் அசத்துவார்களா?

இந்த நிலையில் புதிய சாதனையாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களில் ஜெய் பீம் திரைப்படம் முதலிடத்தை பிடித்திருப்பது சூர்யா ரசிகர்களை உச்சக்கட்ட கொண்டாட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க – Jail Movie Exclusive Celebrity Show | G.V.Prakash, Abarnathy | HD