தெறி படத்தில் தளபதி விஜய் மகன் சஞ்சய் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Jackson Sanjay in Theri Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தெறி படத்தில் தளபதி விஜயின் மகன் - இணையத்தில் வெளியான புகைப்படம்

இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்று தெறி. இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷா அறிமுகமாகி நடித்திருந்தார்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பங்கேற்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி லைக்குகளை பெற்று வருகிறது.