J S K Gopi who has been promoting the Murugar Yuga worship
J S K Gopi who has been promoting the Murugar Yuga worship

நம் தமிழ் கடவுளாம் முருகனை தமிழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக வணங்கி வந்தாலும் முருகர் வழிபாடும் முருகப்பெருமானின் புகழும் தென்னிந்தியாவில் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்து வருகின்றன. தற்போது, சமுக வலைதளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் எங்கு பார்த்தாலும் முருகப் பெருமான் குறித்த காணொலிகள், பாடல்கள், வாசகங்கள் இடம் பெற்று வருகின்றன. இதை நாம் அனைவருமே கண்கூடாக பார்க்கிறோம். இதற்கு ஜெயம் S K கோபியும் ஒரு காரணம் என சொல்லலாம்.

திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், அரசியல் பிரமுகர் என்று அறியப்பட்ட ஜெ எஸ் கே கோபி என்று அழைக்கப்படும் இவர், இன்று ஒரு முழுநேர முருக பக்தராக ஆறுமுகனின் புகழை அகிலமெங்கும் பரப்பி வருகிறார். 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி ஜெயம் எஸ் கே கோபி அளித்த முதல் பேட்டி தான் இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளி.

முருகர் யுகம் ஆரம்பம் என்று 2023ம் வருடம் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் முருகர் உத்தரவோடு இவர் கூறியது முதல் கந்தப் பெருமான் வழிபாடு உலகமெங்கும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து இவரிடம் கேட்ட போது, இவர் சொன்னது: “இவை அனைத்திற்கும் முருகப்பெருமான் மட்டும் தான் காரணம். முருகர் உத்தரவுப் படி தான் அனைத்தையும் சொல்கிறேன், நான் வெறும் ஒரு சிறு கருவி தான் என்கிறார் JSKகோபி.”

முருகர் ஆணைக்கிணங்க வாய் பேச முடியாத, காது கேட்காத, கண் பார்வை தெரியாத குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் ஜெயம் எஸ் கே கோபி, இனிவரும் காலங்களில் முருகர் யுகம் மேலும் விரிவடையும் என்று தற்போது இவர் பேசி வருகிறார்.

கந்தனின் பல்வேறு ஆலயங்களுக்கும் தொடர்ந்து சென்று வரும் இவர், கேரளாவில் உள்ள பெருநா சுப்பிரமணிய சுவாமி கோவில் பற்றியும், கர்நாடகா பெல்லாரியில் ராமர் வழிபட்ட முருகர் கோவில் குறித்தும் பேசியதை தொடர்ந்து தமிழக முருக பக்தர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்துள்ளது. முருகப் பெருமான் பற்றி இவர் ஈடுபட்டுள்ள‌ ஆராய்ச்சியில் இந்தியா முழுவதும் பல வடிவங்களில் முருக வழிபாடு இருந்ததாக சொல்கிறார்.. கேரள மற்றும் கர்நாட‌க மக்கள் சென்னை வடபழனி முருகர் கோவிலுக்கு அதிகளவில் வந்து வழிபடுவதை தொடர்ந்து வடபழனி முருகர் கோவில் குறித்து ஒரு மலையாள‌ சேனல் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

இமயமலையில் இருக்கும் கார்த்திக் சுவாமி கோவிலுக்கு இவர் சென்று வழிபட்டு ஒரு காணொலி வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து தமிழக பக்த‌ர்கள் அங்கு அதிகளவில் சென்ற‌ நிலையில், அரசு சார்பாக தமிழ்நாட்டில் இருந்து அக்கோவிலுக்கு சிறப்பு ரயில் விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் எஸ் கே கோபி கூறிய முருகப் பெருமானின் அற்புத மந்திரமான ‘ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்’ இன்று டிரெண்டாகி ஸ்டிக்கர் வடிவில் இல்லங்களிலும் வாகனங்களிலும் இடம் பெற்று வருகிறது.

தனது ஆன்மிக பயணத்தில் அடுத்த கட்டமாக முருகப் பெருமானின் அற்புதங்கள் பற்றியும் முருக பக்தர்களின் அனுபவங்கள் குறித்தும் திரைப்படம் ஒன்றை தயாரிக்க உள்ள ஜெ எஸ் கே கோபி, தொடர்ந்து பல்வேறு ஊர்களில் உள்ள முருக பக்தர்களை நேரில் சந்தித்து அவர்களை பெரிய அளவில் ஒருங்கிணைக்க உள்ளார். ‘முருகர் அழைக்கிறார்’ என்ற பெயரில் விரைவில் சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள முருக பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று ஜெயம் எஸ் கே கோபி கூறுகிறார்.