தளபதி விஜய்க்கு தங்கையாக உள்ளார் பிரபல நடிகை.

Ivana As Vijay Sister in Thalapathy 68 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 68 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மீனாட்சி நாயகியாக நடிக்க சினேகா, லைலா என பல முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க உள்ளனர். அது மட்டுமல்லாமல் பிரபு தேவா, பிரசாந்த், மைக் மோகன் போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து இந்த படத்தில் தளபதி விஜய் தங்கையாக லவ் டுடே படப்புகழ் இவானா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அதிதி சங்கர், லிஜோமோல் ஜோஸ் , கயல் ஆனந்தி, ரித்து வர்மா போன்ற நடிகைகள் ஆடிசன் செய்து இறுதியாக இவனாவை தேர்வு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.