
தேவர் மகன் படத்தின் தலைப்பு தேவர் மகன் 2 இல்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க சபாஷ் நாயுடு, இந்தியன் 2 என படங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் சமீபத்தில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு தேவர் மகன் 2 உருவாக இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் கமல் ஏன் சாதி ரீதியான படங்களில் நடித்து வருகிறார் என்ற பேச்சும் கிளம்பியது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் இது குறித்து கேட்டதற்கு தேவர் மகன் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது என்று தான் அறிவித்தேன். டைட்டில் இன்னும் அறிவிக்கவில்லையே என பதிலளித்துள்ளார்.
மேலும் தேவர் மகன் 2 படத்தில் கமல்ஹாசன் அப்பா என்றால் மகனாக யார் நடிப்பார்கள்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.