
ISL Football Chennai team win – ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதினர். இதில் மும்பை அணி 2-0 என்ற கணக்கில் சென்னை அணியை வெற்றி பெற்றது.
5-வது சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை எப்.சி அணி மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதினர்.
உள்ளூரில் விளையாடிய மும்பை அணிக்கு அவர்களில் ரசிகர்கள் ஆதரவு நிறையவே இருந்தது, இதனால் அதிக உற்சாகத்துடன் மும்பை அணி விளையாட்டை தொடங்கியது.
ஆட்டதின் 27-வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் ராய்னியர் பெர்னாண்டஸ் மற்றும் 55-வது நிமிடத்தில் மோடோ சோகோவ் ஆகியோர் கோல் அடித்தனர்.
சென்னை அணியின் ஆதிக்கம் அதிகமா இருந்த போதிலும், மும்பை அணி சிறப்பாக தங்களின் தடுப்பு அமைத்து இருந்தது என்றே கூற வேண்டும்.
இறுதி வரையும் சென்னை அணியால் அந்த தடுப்பை உடைத்து கோல் போட முடியாமல் போய்விட்டது.
மேலும், சென்னை அணி இறுதி வரை தங்களில் கோல் கணக்கை தொடங்கவே இல்லை. இறுதியில் மும்பை அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் சென்னையை வெற்றி பெற்றது.
இதனால், மும்பை அணி 20 புள்ளிகள் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது. மேலும், சென்னை அணியின் அரையிறுதி வாய்ப்பு இந்த தோல்வியில் மூலம் சாத்தியம் அற்றதாகிவிட்டது.
இன்றைய ஆட்டத்தில், கேரளா மற்றும் புனே சிட்டி அணிகள் மோத உள்ளது.