ISL Football: Chennai team
ISL Football: Chennai team

ISL Football: Chennai team – 5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு இடகளில் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை அணி முன்னாள் சாம்பியன் கொல்கத்தாவுடன் மோதியது.

ஆட்டம் நன்றாக சூடுபிடிக்க தொடங்கியது, இந்த நிலையில் 14-வது நிமிடத்தில் கொல்கத்தா அணி ஒரு கோல் அடித்தது.

மற்றும் சென்னை அணியை சேர்ந்த தோங்சிங் ஒரு கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.

அதனை அடுத்து கொல்கத்தா அணி வீரர் கோல் அடிக்க முயன்ற போது அதை சென்னை வீரர் கையால் தடுத்தார், இதனால் கொல்கத்தா அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது.

பெனால்டியை கொல்கத்தா அணி வீரர் சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் புள்ளி 2-1 என்று இருந்தது. எனவே, ஆட்டத்தில் தீவிரம் காட்ட தொடங்கிய சென்னை அணி, 88-வது நிமிடதில் கோல் அடித்தது.

இதற்கிடையில் கொல்கத்தா அணி கோல் அடிக்காமல் இருக்க தடுக்க முயன்றதில் கொல்கத்தாவிற்கு மீண்டும் ஒரு பெனால்டி வழங்கப்பட்டது. இதையும் சரியா பயன்படுத்தியது கொல்கத்தா அணி.

இறுதியில் கொல்கத்தா 3 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை 2 புள்ளிகளுடன் தோல்வி அடைந்தது. மற்றும் சென்னை அணி, உள்ளூர் ஆட்டங்களில் ஒன்றிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிட தக்கது. கொல்கத்தா அணிக்கு இது 4-வது வெற்றி ஆகும்.

மேலும், சென்னை அணி இதுவரை 10 ஆட்டங்களில் 1 வெற்றி, 2 டிரா, 7 தோல்வி பெற்று 8-விது இடத்தில் உள்ளது.