பிக் பாஸ் வீட்டுக்குள் தனக்கு பிடித்த போட்டியாளர் இவர்தான் என இசைவாணி தெரிவித்துள்ளார்.

Isai Vani About Favourite Contestant in Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் என இதுவரை 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கடைசியாக வெளியேறியவர் தான் இசைவாணி.

இரண்டாவது ஆளாக வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் வயல்காடு என்ட்ரி ஆக உள்ளே அனுப்பப்பட்டுள்ளார். வெளியே வந்த இசைவாணி ரசிகர்களுடன் உரையாடியபோது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அறியாமல் செய்த பாவங்கள் நீங்க, ஓர் எளிய பரிகாரம்.!

பிக் பாஸ் வீட்டுக்குள் உங்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் யார் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் பாவணி என்றுதான் கூறியுள்ளார். மேலும் பாவணி பற்றி ஏதாவது சொல்லுங்கள் என கேட்டதற்கு அவர் மிகவும் ஸ்வீட்டான பர்சன். எனக்கு மிகவும் பிடித்தமானவர் என தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி இடையே மோதல் இருந்து வந்த நிலையில் இசைவாணி வெளியேறிய பின்னரும் அவரைப்பற்றி இமான் அண்ணாச்சி குறை கூறி வந்தது ரசிகர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vascodagama பட பூஜையில் தயாரிப்பாளர் காலில் விழுந்த நடிகர் Nakul | K.Rajan | HD