ரிச்சர்ட்டுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களுக்கு காரணம் என்ன என்பதை குறித்து பேசியுள்ளார் யாஷிகாவின் அம்மா.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்‌

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே யாஷிகா மற்றும் ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றனர்.

யாஷிகா ரிச்சர்ட்க்கு முத்தம் கொடுக்கும் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இது குறித்து யாஷிகாவின் அம்மா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இருவரும் காதலித்து வருவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் இவர்கள் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

அப்போ இது எல்லாம் படத்தின் விளம்பரத்திற்காக வெளியிடப்படும் புகைப்படங்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.