
அட்லீ, விஜய் மூன்றாவது முறையாக இணைய உள்ள படத்தின் டைட்டிலை பற்றி பேசியுள்ளார் அட்லீ.
தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் அட்லீ விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் விஜயை இயக்க உள்ள படத்தில் அவர் முதல்வராக நடித்தால் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என கேட்டுள்ளனர்.
அதற்கு அட்லீ எவ்வித தயக்கமும் தடுமாற்றமும் இல்லாமல் ஆளப்போறான் தமிழன் என பெயர் வைப்பேன் என கூற அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்துள்ளது.
