திரைக்கு வர தயாராக இருக்கும் “இரவின் நிழல்” திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பார்த்திபன். இவர் தற்போது இயக்கி நடித்துள்ள படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் லீனியர் திரைக்கதை முறையில் முதல்முறையாகஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு தமிழ் சினிமாவில் சாதனை படைத்துள்ளது. அகிரா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

நாளை வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதனை ஆர்வத்தோடு பார்த்து வரும் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

YouTube video